திருமணமான 22 வயது பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்
திருமணமான பெண்ணொருவருடன் தகாத உறவைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய பெண்ணுடன் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் கடந்த 7ஆம் திகதியன்று கடுமையாக தாக்கி பலவந்தமாக மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.
இந்த பெண்ணின் கணவர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமயமே அப்பெண்ணுக்கும் அயலில் வசிப்பவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவதினம் அன்று அந் நபர் தனது இரண்டு நண்பர்களுடன் மதுபானம் அருந்தி அந்தப் பெண்ணை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதுடன் மதுபானத்தையும் பருக வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்தே தப்பியோடிவிட்டார் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.