காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்தே இவர் இன்று (04) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆற்றுப்பகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வட்டவளை வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Related Post

இலங்கையில் வன்முறைகள் – 9 பேர் பலி, சேதமடைந்த சொத்துக்களின் விபரம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு [...]

கிளிநொச்சியில் வீதியோரத்தில் இருந்து பெண் சிசு மீட்பு
கிளிநொச்சியில் பொது மக்களால் பெண் சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – அக்கராயன் [...]

யாழ்ப்பாணம் – தமிழகம் தினசரி கப்பல்சேவை இரத்து
இந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் [...]