வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்
இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் துணை வகையான எச்3என்2 நோயால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 90 நோயாளிகள் தற்போது பதிவாகியுள்ளனர்.
கோவிட் வைரஸின் அறிகுறிகளைக் காட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுமாறு மருத்துவர்கள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.