வவுனியாவில் மதுபோதையில் வந்த கிராம சேவையாளரால் குழப்பம்


வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் மண்டபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொதுமக்களுக்கான இலவசஅரிசி வழங்கும் செயற்பாடு இன்று (13.05) காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இன்று பிற்பகல் குறித்த மண்டபத்திற்கு சென்ற அந்த பிரிவிற்குரிய கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்ததுடன். மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதற்கமைய பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் குறித்த கிராமசேவகரை அனுப்பி வைத்திருந்தார்.

எனினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *