QR முறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.
இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் இது தொடர்பான ட்வீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு
மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டி, [...]

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (30) காலை [...]

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்று நபர் துப்பாக்கி சூட்டில் பலி
யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்கு வயல்கரை பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் ஆண் [...]