குப்பைக்குள் இருந்து வெடித்த மர்ம பொருள் – கணவனும், மனைவியும் படுகாயம்
குப்பை குவியலுக்கு தீ வைத்தபோது இடம்பெற்ற வெடி விபத்தில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கல்தெமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கணவனும், மனைவியும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தனது தாயும் தந்தையும் தமது வீட்டுக்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் குழி தோண்டி தீ வைத்ததாகவும்,
அங்கு பாரிய வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பெண்ணின் இடுப்பு மற்றும் கைகளிலும், அவரது கணவனின் கால்களிலும் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.