Day: February 27, 2023

பொலிஸாரின் கண்ணீர்புகை தாக்குதலால் வேட்பாளர் மரணம்பொலிஸாரின் கண்ணீர்புகை தாக்குதலால் வேட்பாளர் மரணம்

தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று (27) நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் [...]

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். இதனூடாக பயணிகள் அல்லது பொருட்களை வௌியேற்றுதல், கொள்கலன் பெட்டிகளை இறக்குதல், சேமித்து வைத்தல், [...]

யாழில் மூளைக் காய்ச்சலால் 4 வயது சிறுமி மரணம்யாழில் மூளைக் காய்ச்சலால் 4 வயது சிறுமி மரணம்

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். யாழ்.புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென [...]

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு – ஒருவர் கைதுமன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு – ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலை மன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று (27) காலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் [...]

யாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு கும்பல் அடாவடியாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு கும்பல் அடாவடி

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் [...]

சிறுவர் இல்லத்தில் பல சிறுமிகள் துஷ்பிரயோகம் – 60 வயது நபர் கைதுசிறுவர் இல்லத்தில் பல சிறுமிகள் துஷ்பிரயோகம் – 60 வயது நபர் கைது

இரத்தினபுரி – ரக்வான பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரக்வான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் [...]

QR முறை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்குQR முறை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு

QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள்காட்டி நியூஸ்ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு [...]

குற்றச்சாட்டை நிரூபித்தால் சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்குற்றச்சாட்டை நிரூபித்தால் சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என [...]

குப்பைக்குள் இருந்து வெடித்த மர்ம பொருள் – கணவனும், மனைவியும் படுகாயம்குப்பைக்குள் இருந்து வெடித்த மர்ம பொருள் – கணவனும், மனைவியும் படுகாயம்

குப்பை குவியலுக்கு தீ வைத்தபோது இடம்பெற்ற வெடி விபத்தில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கல்தெமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கணவனும், மனைவியும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் மகன் பொலிஸாருக்கு [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [...]