வல்லிபுர ஆழ்வார் திருவிழாவில் பலரையும் வியக்கவைத்த பெண்
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்துள்ளனர்.
அந்தவகையில்வல்லிபுர ஆழ்வாரிடம் வரம் வேண்டி பெண்ணொருவர் இருபதிற்கும் மேற்பட்ட கற்பூர சட்டிகளை கையில் ஏந்தியும் தலையில் சுமந்தவாறும் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அப் படங்கள் தற்போது சமூகவலைத்தளஙங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.