யாழ் நிலாவரையில் திடீரென முளைத்த புத்தர் சிலை
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புத்தர் சிலை நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.