பனிப்புயல் காரணமாக 1மில்லியன் வீடுகளுக்கு மின்தடை, 6,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
அமெரிக்காவை பாதித்த குளிர்கால புயல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐந்து மாநிலங்களில் 945,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
FlightAware தரவுகளின்படி, 6,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் பல விமான தாமதங்கள் உள்ளன.