துருக்கி – சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கி – சிரிய எல்லையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 44,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.