சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து விபத்து – இருவர் பலி
சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் சுமார் 28 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.