யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் வாள்வெட்டு – இருவர் படுகாயம்
யாழ்.கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் குழுவினருக்கே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவ இடத்தில்
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.