பதவிக்காக ஜனாதிபதி ரணிலிடம் கெஞ்சும் எம்.பிக்கள்
சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு வழிகளில் தகவல் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பலமானவர்கள் ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிலர் ஜனாதிபதியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், சிலர் ஜனாதிபதிக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பேற்படுத்தி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.