பாதுகாப்பற்ற புகைரத கடவைக்குள் நுழைந்த இளம் குடும்ப பெண் பலி
வேலைக்கு செல்வதற்காக பாதுகாப்பற்ற புகையிறத கடமையை கடக்க முயன்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 6 மணி அளவில் வாத்துவ வாத்துவ புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தனது கடமைகளுக்காக கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக இந்த புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளார்.
புகையிரத பாதையை கடப்பதற்காக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பான புகையிரத பாலத்தை கடக்காமல் புகையிரத பாதை ஊடாக கடக்கும்போது விபத்து இடம்பெற்றுள்ளது.
மகா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.