யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவில் தற்கொலை
முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் நேற்று உயிரிழந்தார்.
சாவகச்சேரி கற்குழி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.