வகுப்பறையிலிருந்த பிள்ளைகளை பிடித்து வீதியில் விட்ட அதிபர் – பொதுமக்கள் போராட்டம்

தாயார் அதிபருடன் முரண்பட்டதால் வகுப்பறையில் கல்வி கற்றக் கொண்டிருந்த 3 பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விரட்டியடித்த அதிபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வகுப்பறையில் பிள்ளைகள் இருந்தபோது அவர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் நுழைவாயிலுக்கு முன்பாக வெகுநேரம் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்காரணமாக பெற்றோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது தாயார் தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டியதாகவும் அதனாலேயே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Post

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி புத்தர் சிலை வைக்க முயற்சி
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருமார்கள் [...]

யாழ் ஆனைப்பந்தியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் [...]

கொழும்பில் காதலி கொலை – தற்கொலைக்கு முயன்ற காதலன்
காதல் தகராறு காரணமாக நேற்று (17) கொழும்பு குதிரைப்பந்தய திடலில் கூரிய ஆயுதத்தால் [...]