காதலர் தினத்தன்று மனைவிக்கு கணவன் செய்த வித்தியாசமான செயல்
லகளவில் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் உலகெங்கிலுமுள்ள காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தவும், காதலை நிறுப்பிக்கவும், அச்சரியப்படுத்துவதற்கவும் பல்வேறு முயற்சிகளை செய்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில், காதலர் தினத்தன்று தாய்லாந்து நாட்டை சேர்ந்த கணவர் தனது மனைவியை அசத்துவதற்காக திருமண சான்றிதழையே தனது கையில் டாட்டுவாக குத்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்து சேர்ந்த ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியை அச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமாக யோசனை செய்தார். அதன் பிறகு அவர் தனது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார்.
இதனையடுத்து அவர் ஒரு மிகச்சிறந்த டாட்டூ கலைஞரை சந்தித்து இது தொடர்பில் கூறினார். முதலில் யோசித்த அந்த டாட்டூ கலைஞர் அதன்பின் ஒப்புக்கொண்டார்.
சுமார் 8 மணித்தியாலம் செலவு செய்து அவரது கையில் இரண்டு பக்கத்திலும் திருமண சான்றிதழ் Tattoo குத்தப்பட்டது.
எனினும், அந்த நபரின் அன்புக்கு நான் அடிமை ஆனேன் என்றும் அவர் தனது மனைவியை அசத்த வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால் அதற்கு ஒப்புக்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முழு சான்றிதழையும் சாதாரண மையால் முதலில் நகலெடுத்து அதன் பின் டாட்டூ துப்பாக்கி மூலம் வரைந்தேன் என்றும் மிக கச்சிதமாக இந்த டாட்டூ வந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தனது கையில் திருமண சான்றிதழ் டாட்டூ குத்தி கொண்டு சென்ற அந்த நபர் தான் அது மனைவியிடம் அதை காண்பித்தபோது ஒரு நிமிடம் அவரை மனைவி ஆச்சரியத்தால் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தன் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்படை தான் இந்த டாட்டூ என்பதை புரிந்து கொண்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.