வவுனியாவில் திடீர் சுகயீனம் காரணமாக குடும்பஸ்தர் மரணம்
வவுனியாவில், வேலைத்தளத்தில் நின்றவர் உடல் சோர்வடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பண்டாரிக்குளம் பகுதியில் பாரவூர்தி ஒன்றின் திருத்த வேலை செய்துள்ளார்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது தலை சுற்றுவதாக தனது குடும்பத்தினரை அழைத்து முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனத் தெரிவித்துள்ள வைத்தியர்கள், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் வசிக்கும் 60 வயதுடைய முருகன் சந்திரலிங்கம் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.