மட்டக்களப்பில் படகு விபத்து – ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் பலி
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் உயிர்பிழைத்துள்ளனர்.