யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்ப்பு பேரணி
வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று சுதந்திர தின எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
இதில் குடிசார் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழர் தயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் அபகரிக்கப்பட்ட நிலங்களை திருப்பிக் கொடுக்குமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் “தடைகளை உடைப்போம், தமிழர் தேசம் எமது அடையாளம்” போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.