புதுக்குடியிருப்பில் பிரபல நகை கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் நேற்று (03-02-2023) காலை சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இவர் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் அமைந்துள்ள காட்டு அந்தோனியார் கோவிலுக்குள் சடலமான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவர் வழமையாக காட்டு அந்தோனியார் கோவிலுக்கு சென்று வருவதாகவும் இன்று காலையும் கடையினை திறக்கவந்து விட்டு கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி விட்டு சென்றுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Related Post

யாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்காமல் சென்னைக்கே திரும்பியது
யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் [...]

விபத்தில் காயமடைந்த நான்காவது இளைஞரும் உயிரிழப்பு
கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் [...]

கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று [...]