பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பலி
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகனுக்கு 39 வயது, தாயாருக்கு 62 வயது என கூறப்படுகிறது.
இவர்கள் தேவகிரிய தித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தின் பின் சில்லில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.