யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோ


யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்டம் ஒன்றில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காணொளியில் உள்ளவர்கள் தொடர்பான தகவல் தொிந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அந்த பணத்தை மீள செலுத்தாத இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ

அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *