பொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த போது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியர் ஒருவர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அன்றைய தினம் இரவு குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக, உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான விசாரணைகளுக்காக பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.