மாணவர்களுக்கான சுற்றுலா தொடர்பில் புதிய நடைமுறை

பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனம் செலுத்திவருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் பாரிய விபத்தொன்றை எதிர்கொண்டுள்ள நிலையில் கல்வியமைச்சர் இத்தகைய மட்டுப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகஅந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்கள் மாலை 6 மணிக்கு முதல் மீண்டும் குறித்த பாடசாலைக்கு வந்துசேர வேண்டுமென்றும் அதேவேளை எதிர்காலத்தில் பாடசாலை சுற்றுலாவிற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பாடசாலைகள் தாம் அதற்காக தேர்ந்தெடுக்கும் பிரதேசம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டுமென்றும் கல்வியமைச்சும் அதுதொடர்பில் முக்கிய கவனத்தை செலுத்தும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related Post

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் “வட்ஸ் அப்” காதலால் வந்த வினை
வட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பினால் 15 வயது சிறுமி பாலியல் [...]

யாழ் மீசாலையில் வன்முறை கும்பல் அட்டூழியம் – வீடு தீக்கிரை
யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த [...]

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்கு
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் அலட்சியத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் [...]