தேயிலை ஏற்றுமதி மூலம் 411.9 பில்லியன் ரூபா வருமானம்
தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரை 411.9 பில்லியன் ரூபா வருவாயாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் முழு வருடத்திலும் கிடைக்கப்பெற்ற அதிகூடிய வருவாய் இது என தேயிலை ஏற்றுமதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 147.74 பில்லியன் ரூபா அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஈராக்கே இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடாக திகழ்கின்றது.
அதனைத் தொடர்ந்து, ரஷ்யா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதில அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.