60 வயதான பெண்ணை கொலை செய்து கொள்ளை – கர்ப்பவதி உட்பட இருவர் கைது
வீடொன்றில் பெண் ஒருவரை கொலை செய்து சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு வேலைக்காரி மற்றும் அவருடைய சட்டரீதியற்ற கணவன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய லான்சியாவத்தையிள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவருடைய சட்டரீதியற்ற கணவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
29வயதான குறித்த சந்தேகநபர் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், 6 தங்க வளையல்கள், 6 தங்க மோதிரங்கள், ஒரு கைக்கடிகாரம்,
கையடக்கத் தொலைபேசி, 17 வெளிநாட்டு நாணயக்குற்றிகள், ஒரு டெப்லட் மற்றும் ஒரு ஜோடி பெண்கள் அணியும் பாதணிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.கடந்த 15ஆம் திகதி 60 வயதான மொஹமட் ஜெகிர் பாத்திமா நசீர் என்பவர்
அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.