யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுமார் 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயாராகிய நிலையில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.