யாழ். நகர விடுதியில் தங்கிய இளம் ஜோடி – இரகசியமாகப் படம் பிடித்த பணியாளர் கைது


யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் ஓரிரு இடங்கள் சுரண்டப்பட்டு, அங்கு திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்துள்ளார்.

இதனை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் ஓரிரு இடங்கள், சுரண்டப்பட்டு அங்கு கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

இந் நிலையில் இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கு கடமையாற்றியிருந்த ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *