யாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்று இரவு முதல் நின்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரமாக அநாதரவாக இருந்தது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவலளித்தனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமை கோரப்படாத சாவியுடன் அச்சுவேலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டது.