மதுபானசாலைகள் நாளை மூடப்படும்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மது விற்கப்படும் அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் வைன் ஸ்டோர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.