சீனாவில் 14 மாடி கட்டிடத்தில் தீ – 16 பேர் பலி
சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகிய நிலையில், 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனாவின் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவி, கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்துள்ளது.
இதனால், மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.