5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி – இன்று தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்
இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (120 சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
Related Post

10 இந்திய மீனவர்கள் கைது – மீன்பிடி படகு பறிமுதல்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த 10 மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு ஒன்றை [...]

ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு [...]

யாழ் காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், [...]