ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை (14) மாலை 06.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் ( 15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி கைது
வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணொருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க [...]

கோட்டபாயவின் மனைவியை மிரட்டி 10 லட்சம் கப்பம் கேட்ட தமிழர் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி [...]

மல்லாவியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் [...]