நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும்.
5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related Post

சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி
சுற்றிவளைப்புக்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த குழு ஒன்றின் பொலிஸ் [...]

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை [...]

காதலுக்கு மறுப்பு – மாணவி மீது வாள்வெட்டு
கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு [...]