தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஒருவர் பலி
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பலியிகியுள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.