யாழில் 19 வயது இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் – மணல் கடத்தல் கும்பலின் அட்டூழியம்

மணல் கடத்தல் கும்பல் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறி 19 வயதான இளைஞன் மீது மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நேற்றிரவு குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தர்சியன் எனும் இளைஞனே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில், விசேட அதிரடிப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட கப்ரக வாகனத்தின் உரிமையாரும் சில இளைஞர்களும் சேர்ந்தே, குடத்தனை மேற்கை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

யாழில் மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண் மரணம்
யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். [...]

யாழில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது
யாழ்.தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் [...]

முற்றாக முடங்கப்போகும் பேருந்து சேவை
நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக [...]