ஆற்றில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
மகாவலி ஆற்றின் ஹக்கிந்த, வராதென்ன பகுதியில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டில், தனது நண்பர்கள் குழுவுடன் மகாவலி ஆற்றின் வராதென்ன பகுதியில் உள்ள பாறையில் உல்லாசமாக இருந்தபோது, முகம் கழுவுவதற்காக ஆற்றில் இறங்கிய இளைஞன், திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கண்டி ஹல்லோலுவ பகுதியை சேர்ந்த ரவிந்து லக்ஷித விஜேசிங்க என்ற 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞனை பொலிஸ் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடிய போதும் இன்று (02) பிற்பகல் வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மகாவலி ஆற்றில் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படும் இந்த இடம் இங்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞனை தேடும் பணியில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.