யாழில் காணாமல்போன சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம்
சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணைகள் அடிப்படையில் குறித்த சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை திருமணமான நபர் ஒருவர் கண்டிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.