தேசிய மட்டத்தில் வேலாயுதம் மகாவித்தியாலயம் முதலிடம் (பருத்தித்துறை)

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

இன்று அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில்
தரம் 10,11 இற்கான நாட்டார் பாடல் குழு நிகழ்வில் முதலாம் இடம் பெற்றுள்ளது யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்.

இது பற்றிய உத்தியோகபூர்வத் தகவலை பாடசாலை அதிபர் திரு.கு.ரவீந்திரன் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது…

மேலும் அவர் தனது தகவலில் எமது
பாடசாலை மாணவச் செல்வங்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அயராது அர்ப்பணிப்போடு பாடுபட்ட சங்கீத பாட ஆசிரியை
செல்வி விஜயகுமாரி செல்லத்துரை
அவர்களுக்கும் மாணவர்களை போட்டிக்கு
அழைத்துச் செல்வதில் அக்கறையுடனும்
ஆர்வத்துடனும் அர்ப்பணிப்போடும் செயற்பட்ட ஆசிரியர் திரு S.ரஜனிகாந்
அவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அனைவருக்கும் மிக்க நன்றிகளும் கூறியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்