மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் பிறப்பு நள்ளிரவு திருப்பலி நேற்று சனிக்கிழமை இரவு மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடை பெற்றன.

-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் ,அருட்தந்தையர்கள், இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

மேலும் இந்த காலகட்டத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.

விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளிலே ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

இயேசுநாதர் பிறந்தது ஒரு மாட்டு தொழுவத்தில். அவர் பிறக்கும் போது அவருக்கு பெரிய மாளிகை இருக்கவில்லை.ஒரு பெரிய வீட்டில் கூட அவர் பிறக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழையாகத்தான் அவர் பிறந்தார்.

ஆகையால் தான் அவர் ஏழைகளுக்கும் வரியோருக்கும் ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். என ஆயர் தனது உரையில் தெரிவித்தார்.

திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC 0332 DSC 0340 DSC 0346 DSC 0363 DSC 0374 DSC 0382 DSC 0385 DSC 0396 DSC 0402 DSC 0403 DSC 0421 DSC 0280 DSC 0298