மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை உயிரிழப்பு
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் நேற்று (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொலையாளியின் மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.