14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ள ஏலக்காயின் விலை
இலங்கையில் தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7,000 – 8,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் வருடாந்தம் சுமார் 33 மெற்றிக் டொன் ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.