இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை
இலங்கையில் சமீப காலமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதேவேளை எரிபொருள் வாங்க நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதனிக்க முடிகின்றது.
இலங்கை மக்களுக்கான அதிர்ச்சி தகவல் : மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை
இந்த நிலையில் இன்று (26-06-2022) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா பெற்றோல் 50 ரூபாவினால் 470 ரூபாவாக அதிகரித்துள்ளது.
லங்கா பெற்றோல் 95 100 ரூபாவினால் 550 ரூபாவாக அதிகரித்துள்ளது.
லங்கா டீசல் 60 ரூபாவால் அதிகரித்து 460 ரூபாவாகும்
லங்கா சுப்பர் டீசல் 75 ரூபாவினால் 520 ரூபாவாக அதிகரித்துள்ளது