அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கனரக வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.
மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களின் சாரதிகள் குருந்துகஹஹெதெக்ம சந்திப்பில் இருந்து வெளியேறி பத்தேகம சந்திப்பில் மீண்டும் அதிவேகப் பாதைக்குள் நுழையுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குருந்துகஹஹெதெக்ம மற்றும் பத்தேகம இடையே வாகன ஏற்பட்டுள்ள விபத்து காரணமாக ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.