மூன்று நாட்களில் 3500 கோடி வசூல் – உலக சாதனை

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 7500 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாகி வெளியாகிய மிக பிரமாண்டமான திரைப்படம் அவதார்-02. உலகம் முழுவதிலும் ஒரே தடவையில் 160 மொழிகளில் வெளியாகிய இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது.
முதல் படத்தில் வெளிப்படுத்திய மிக பிரமாண்டமான படைப்புக்களை விட சற்று வித்தியாசமானதும் நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிதுமாக உருவாகியுள்ள இப்படமானது மீண்டும் ஒரு முறை சரித்திரம் படைக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படமானது வெளியாகி 03 நாட்களில் இந்தியாவில் மாத்திரம் 133 கோடியினை வசூல் செய்ததுடன், உலகமெங்கிலும் 3500 கோடி வசூல் செய்து வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளது.
வெளியாகிய முதல் வாரத்திலே படத்தின் பட்ஜெட்டில் அரைவாசியைக் கடந்துள்ள படம் என்னும் சாதனையினை நிலைநாட்டியுள்ளது. சீனா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படத்திற்கு அமோக வசூல் கிடைத்துள்ளது.
Related Post

பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சி [...]

மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்
மர்மமான முறையில் பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அங்மாலி [...]

வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் [...]