விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத நிதி உதவி
பெரும் போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20000 ரூபா எனும் அதிகபட்ச தொகையிலான நிதி உதவியை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது.
இதற்கமைய ஒரு ஹெக்ரெயர் அல்லது அதற்கு குறைவான விவசாய நிலங்களில் நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளுக்காக அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபா நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
ஒரு ஹெக்ரெயருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளுக்காக அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.