மியன்மார் நாட்டு ஏதிலிகள் இன்று நீர்கொழும்பு அனுப்பபடுகின்றனர்
யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் நாட்டு எதிலிகள் இன்று நீர்கொழும்புக்கு அனுப்பபடவுள்ளனர்.
பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்தபோது இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உட்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி இரு பேருந்துகளில் இவர்களை நீர் கொழும்புக்கு அனுப்ப ஒழுங்குகள் செய்திருந்த நிலையில், உயர்மட்டத் தலையீட்டால் அது தடுக்கப்பட்டதுடன்,
யாழ்.சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வடமாகாண அமைச்சுக்களின் பயன்பாட்டிலுள்ள 3 பேருந்துகள் ஒழுங்கமைக்கப்பட்டு போதிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு,
அம்புலன்ஸ் வண்டி ஒன்றும் இணைக்கப்பட்டு இன்று காலை அவர்கள் நீர்கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்த நடவடிக்கைக்கான நேரடி கண்காணிப்பை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கொண்டுள்ளார்.