70 சதவீதமாக அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்


மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கி வரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமையாளர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்து தெரிவித்த அவர் கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் நடுத்தர மக்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய மின் கட்டண அதிகரிப்பையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70% ஆ அதிகரிக்கும் பரிந்துரையை இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவிற்கு சமர்ப்பிக்கவுள்ளது.

தற்போதைய மின் கட்டண திருத்தத்திற்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் 360 ரூபா குறைந்தபட்ச கட்டணத்தை 3000 ரூபா ஆகவும், 60 அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் 780 ரூபா கட்டணத்தை 5000 ரூபா ஆகவும், 90 அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் 1700 ரூபா கட்டணத்தை 7000 ரூபாய் ஆகவும், மத ஸ்தலங்களிடம் இருந்து அறவிடப்படும் 1280 ரூபாவை 5300 ரூபா ஆகவும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *